திருவண்ணாமலை விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
திருவண்ணாமலை, 12 ஜூன் (ஹி.ச.) திருவண்ணாமலை மாவட்டத்தின் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொள்வதற்கு திருவண்ணாமலைக்கு வருகை தந்த பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளையாட்டு மைதானத்தை ஆய்வு செய்து வீராங்கனைகளுடன
Aadhav Arjuna


திருவண்ணாமலை, 12 ஜூன் (ஹி.ச.)

திருவண்ணாமலை மாவட்டத்தின் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொள்வதற்கு திருவண்ணாமலைக்கு வருகை தந்த பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளையாட்டு மைதானத்தை ஆய்வு செய்து வீராங்கனைகளுடன் உரையாடினார்.

அதனைத் தொடர்ந்து உடற்பயிற்சி கூடத்தில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை நேரடியாக ஆய்வு செய்த அவர், பின்னர் ஸ்கேட்டிங் செய்யும் சிறு வீராங்கனை அழைத்து ஸ்கேட்டிங் செய்யுமாறு கூறிய அவர் அதற்கு குழந்தையின் தங்கை ஸ்கேட்டிங் செய்தது அனைவரது மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து கூடை பந்து வீரர்களின் கூடை பந்து விளையாட வேண்டும் என அமைச்சரிடம் கேட்க அதற்கு அவர் நொடியும் தயங்காமல் கூடை பந்து வாங்கி மூன்று முறை முயற்சி செய்து நான்காவது முறையாக தனது இலக்கை அடைந்தார்.

அதனைத் தொடர்ந்து கூடை பந்து ஸ்கேட்டிங் கோர்ட் உள்ளிட்டவைகளை வீராங்கனைகள் அமைச்சரின் கையொப்பம் வாங்கி மகிழ்ந்தனர், இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / ANANDHAN