Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஜூன் (ஹி.ச.)
சென்னையில் தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்பவர், கணவரை இழந்து தனியாக வசித்து வந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அணண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில் அவர்,
பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் தொடர்ந்து அளித்து வரும் வாக்குறுதிகளுக்கு முரணாக தற்போதைய நிலை இருப்பது ஏமாற்றமளிப்பதாக கூறினார்.
மேலும், திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை என்றும், இதுபோன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தைரியம் எங்கிருந்து வருகிறது என்ற கேள்வியையும் எழுப்பினார்.
சமூக விரோதச் செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு அரசியல் அடையாளம் எந்த வகையிலும் பாதுகாப்பாக இருக்கக் கூடாது என்பதை முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்றும், சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P