Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை , 12 ஜூன் (ஹி.ச .)
தனது காதலியின் புகைப்படங்களை அவரது அனுமதியின்றி முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த இளைஞரை நெல்லை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர் சக்திவேல் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காதலியுடன் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை, சம்பந்தப்பட்ட பெண்ணின் ஒப்புதல் பெறாமல் சக்திவேல் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சக்திவேலை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் தனிநபர் அந்தரங்க உரிமை மீறல் தொடர்பான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருவரின் தனிப்பட்ட புகைப்படங்களை அவரது அனுமதியின்றி இணையத்தில் வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும் எனவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்படும் பெண்கள் தயக்கமின்றி புகார் அளிக்க முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b