Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஜூன் (ஹி.ச.)
மறைந்த திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மனைவி சந்திரலீலா பாரதிராஜா மற்றும் குடும்பத்தினர், தங்களின் துயரத்தில் பங்கேற்று ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
.ஜூன் 10-ஆம் தேதி பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து தங்களின் துயரத்தில் பங்குகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாரதிராஜாவின் இறுதிச் சடங்கிற்கு முழு அரசு மரியாதை வழங்க உத்தரவிட்ட தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும், ஆறுதலாக இருந்து தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்ட அமைச்சர்கள், தேனி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் சென்னை, தேனி மாவட்ட அரசு அதிகாரிகளுக்கும் குடும்பத்தினர் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், இரங்கல் செய்தி வெளியிட்ட அரசியல் தலைவர்கள், பல்துறை பிரமுகர்கள், செய்தி அறிந்து நேரில் வந்து அஞ்சலி செலுத்திய திரையுலகினர், ரசிகர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் மக்கள் அனைவருக்கும் குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
எங்கள் துயரத்தில் பங்குகொண்டு ஆறுதல் அளித்த அனைவருக்கும் குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று சந்திரலீலா பாரதிராஜா மற்றும் குடும்பத்தினர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P