Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஜூன் (ஹி.ச.)
வேளாண்மை துறை அமைச்சர் வினோத் சென்னை ராயப்பேட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
பயிர் கடன் தொடர்பான முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் விஜய் விரைவில் வெளியிடுவார் என உறுதிபட தெரிவித்தார்.
விவசாயிகளின் நலனில் அரசு எப்போதும் அக்கறையுடன் செயல்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர், முதலமைச்சர் விஜய் விவசாயிகளை ஒருபோதும் கைவிட மாட்டார்.
அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றார்.
பயிர் கடன் தள்ளுபடி குறித்து பல்வேறு தரப்பினருடன் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், விவசாயிகளின் நிதிச்சுமையை குறைக்க அரசு முனைப்புடன் செயல்படுவதாகவும் அவர் விளக்கினார்.
மேலும், மேட்டூர் அணையின் தற்போதைய நிலை குறித்து பேசிய அமைச்சர், அணையின் நீர்மட்டம் தற்போது 70 அடியாக மட்டுமே உள்ளதால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முடியாத சூழல் நிலவுவதாக தெரிவித்தார்.
விவசாயிகளின் குறுவை சாகுபடிக்கு உதவும் வகையில் அரசு அறிவித்துள்ள குறுவை தொகுப்பு திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு இடுபொருட்கள், இயந்திரங்கள் உள்ளிட்ட தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் வினோத் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b