முதல் இந்திய பிரதமராக ஸ்லோவாக்கியா பயணம் - G7 மாநாட்டில் பங்கேற்கும் மோடி
புதுடெல்லி, 12 ஜூன் (ஹி.ச.) பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 13 முதல் 18-ஆம் தேதி வரை பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு முக்கிய வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தின் முக்கிய அம்சமாக, ஸ்லோவாக்கியா நாட்டிற்கு அதிகாரப்பூர்வமாகச் செல்
மோடி


புதுடெல்லி, 12 ஜூன் (ஹி.ச.)

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 13 முதல் 18-ஆம் தேதி வரை பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு முக்கிய வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தின் முக்கிய அம்சமாக, ஸ்லோவாக்கியா நாட்டிற்கு அதிகாரப்பூர்வமாகச் செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார்.

ஸ்லோவாக்கியா பயணத்தின் போது அந்நாட்டு அரசியல் தலைவர்களுடன் சந்தித்து, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, உற்பத்தித் தொழில் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடனான இந்தியாவின் உறவை விரிவுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஜூன் 15 முதல் 17 வரை பிரான்சில் நடைபெறும் G7 Summit 2026 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். உலக பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி பாதுகாப்பு, சர்வதேச வர்த்தகம் மற்றும் புவிசார் அரசியல் சவால்கள் குறித்து நடைபெறும் ஆலோசனைகளில் இந்தியாவின் கருத்துகளை அவர் முன்வைக்க உள்ளார்.

மேலும், வளர்ந்து வரும் நாடுகளின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் குளோபல் சவுத் நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள், வளர்ச்சி நிதி, தொழில்நுட்ப அணுகல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான விவகாரங்களையும் மோடி வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பயணம், ஐரோப்பிய நாடுகளுடனான இந்தியாவின் பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்துவதோடு, சர்வதேச அரங்கில் இந்தியாவின் செல்வாக்கை மேலும் உயர்த்தும் முக்கிய ராஜதந்திர நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P