அதிமுக நிர்வாகி பாலகங்கா தவெகவில் இணைந்தார்
சென்னை, 13 ஜூன் (ஹி.ச.) வடசென்னை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த பாலகங்கா, தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று இணைந்தார். கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதிம
AIADMK functionary Balaganga joined TVK


சென்னை, 13 ஜூன் (ஹி.ச.)

வடசென்னை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த பாலகங்கா, தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று இணைந்தார்.

கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அதிமுகவில் இருந்து வெளியேறும் தலைவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செந்தில்நாதன், வனரோஜா மற்றும் இளவரசன் ஆகியோரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.

இதேபோல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான தவசி மற்றும் ஜான் மகேந்திரன் ஆகியோரும் தங்களது அரசியல் பயணத்தை விஜய்யுடன் தொடர முடிவு செய்துள்ளனர்.

உள்ளாட்சி அமைப்புகளிலும் தவெகவுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் புவனேஸ்வரி மற்றும் போடிநாயக்கனூர் நகராட்சி அதிமுக கவுன்சிலர் கலையரசி ஆகியோர் கட்சி மாறியுள்ளனர்.

மேலும், சென்னை உட்பட நான்கு மண்டலங்களைச் சேர்ந்த அதிமுக போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் மொத்தமாக தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தொழிற்சங்கத்தினர் மொத்தமாக கட்சி மாறியிருப்பது அதிமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் தீவிர களப்பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், பிற கட்சிகளில் இருந்து முக்கிய தலைவர்கள் தொடர்ந்து இணைந்து வருவது அக்கட்சிக்கு கூடுதல் பலம் சேர்ப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து இணைந்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b