த.வெ.க-வில் இணைகிறார் அமமுக மாநில பொருளாளர் எஸ்.கே. செல்வம்
சென்னை, 13 ஜூன் (ஹி.ச.) அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொருளாளரும், சேலம் வீரபாண்டி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.கே. செல்வம், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று தன்னை இணைத்துக் கொள்ள உள்ளார்.
AMMK State Treasurer S.K. Selvam joins TVK


சென்னை, 13 ஜூன் (ஹி.ச.)

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொருளாளரும், சேலம் வீரபாண்டி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.கே. செல்வம், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று தன்னை இணைத்துக் கொள்ள உள்ளார்.

அவருடன் சின்னத்திரையில் பிரபலமான நடிகர் பாண்டி ரவி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் தவெகவில் இணைய உள்ளனர்.

பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்வு நடைபெற உள்ளது.

அமமுகவின் முக்கிய நிர்வாகியாகவும், முன்னாள் எம்எல்ஏவாகவும் இருந்த எஸ்.கே. செல்வத்தின் வருகை, சேலம் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தொடர்ந்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், திரைத் துறையினரும் தவெகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b