Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி, 13 ஜூன் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, மாநிலத்திற்கு அதிகளவில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் நாளை சிங்கப்பூர் பயணம் மேற்கொள்கிறார்.
பயணம் குறித்த அறிக்கையில் தெரிவித்ததாவது :
குறிப்பாக புதிய தலைநகரம் அமராவதி கட்டுமானத்துக்கு தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை பெறுவது இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
பெங்களூரில் இருந்து காலை அவர் சிங்கப்பூருக்கு புறப்படுகிறார். அவருடன் நகராட்சி நிர்வாக அமைச்சர் நாராயணா மற்றும் உயரதிகாரிகள் குழுவும் செல்கிறது.
சிங்கப்பூரில் அவர் அந்நாட்டு பிரதமர் உள்ளிட்ட உயர்நிலை அரசியல் தலைவர்களை சந்தித்து, ஆந்திரப் பிரதேசத்தில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விளக்க உள்ளார்.
மேலும், வணிக, வெளியுறவு, உள்துறை அமைச்சர்களுடனும் முக்கிய ஆலோசனைகள் நடைபெறவுள்ளன.
அதேபோல், கூகுள் கிளவுட், GIC உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் வெஞ்சர் கேபிடலிஸ்ட்களுடன் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்டார்ட்அப் முதலீட்டாளர்களுடன் வட்டமேசை சந்திப்பிலும் முதல்வர் பங்கேற்கிறார்.
அமராவதி மாஸ்டர் பிளானை வடிவமைத்த சுர்பானா ஜுராங் நிறுவன அதிகாரிகளுடன் தனிப்பட்ட ஆலோசனையும் நடைபெற உள்ளது. நகரத் திட்டமிடல் மற்றும் கட்டுமான முன்னேற்றம் குறித்து இதில் விவாதிக்கப்படும்.
மேலும், உலக நகரங்கள் உச்சி மாநாட்டில் (World Cities Summit) முதல்வர் உரையாற்றுகிறார். 2026ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள CII கூட்டாண்மை மாநாட்டுக்கான முன்னோட்ட ரோட்ஷோவிலும் அவர் பங்கேற்கிறார்.
இந்த பயணம் 16ஆம் தேதி இரவு நிறைவடையும் நிலையில், முதல்வர் மீண்டும் இந்தியா திரும்புகிறார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA