Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திரா , 13 ஜூன் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேசத்தில் கூட்டணி அரசு இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு நடைபெறும் வெற்றி விழாக்களை கடுமையாக விமர்சித்தார் மாநில காங்கிரஸ் தலைவர் ஒய். எஸ். ஆர் ஷர்மிளா.
இது குறித்து அவர் தனது அறிக்கையில் அவர் கூறியதாவது:
தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட ‘சூப்பர் சிக்ஸ்’ திட்டங்கள் ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளாகியும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.
மாநிலத்தில் கண்கூடாக தெரியும் வளர்ச்சி எதுவும் இல்லை.
வளர்ச்சியை விட அரசு கடன் வாங்குவதிலேயே சாதனைகள் படைத்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
“விளம்பரம் அதிகம், நிர்வாகம் பலவீனம் கடன்கள் அதிகம், வளர்ச்சி இல்லை” என அவர் விமர்சித்தார். தற்போதைய ஆட்சி மக்களை மாயையில் ஆழ்த்தும் “மாயாபஜார்” போல செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
மாநிலத்தை மறுசீரமைப்போம் என்ற வாக்குறுதி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பிய அவர், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசு வெற்றி விழா நடத்துவது வெட்கக்கேடு என கடுமையாக கண்டித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA