Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 13 ஜூன் (ஹி.ச.)
ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் புகழ்பெற்ற ஸ்காட்டியக் கணிதவியலாளரும், கோட்பாட்டு இயற்பியலாளரும் ஆவார்.
இயற்பியல் வரலாற்றில் ஐசக் நியூட்டன் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகியோருக்கு இணையாக இவர் மதிக்கப்படுகிறார்.
மின்னியல், காந்தவியல் மற்றும் ஒளியியல் ஆகிய மூன்று வெவ்வேறான துறைகளை ஒருங்கிணைத்து ஒரே கோட்பாடாக மாற்றினார்.
மின்சாரமும் காந்தமும் இணைந்து மின்காந்த அலைகளாக விண்வெளியில் பரவுகின்றன என்பதை மாக்ஸ்வெல் சமன்பாடுகள் (Maxwell's Equations) மூலம் கணித ரீதியாக நிரூபித்தார்.
ஒளி என்பதும் ஒரு வகையான மின்காந்த கதிர்வீச்சே என்று கண்டறிந்தார்.
சனி கிரகத்தின் சுற்றியுள்ள வளையங்கள் தொடர்ச்சியான திடமான பொருளாக இருக்க முடியாது என்றும், அவை பில்லியன் கணக்கான சிறிய துகள்களால் ஆனவை என்றும் கணித ரீதியாக நிரூபித்தார்.
பிற்காலத்தில் விண்கலன்கள் இதனை உறுதி செய்தன.
நவீன இயற்பியலின் தந்தை என்று அழைக்கப்படும் இவருடைய கண்டுபிடிப்புகள், ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டிற்கும் குவாண்டம் இயக்கவியலுக்கும் அடித்தளமாக அமைந்தன
கோட்பாட்டு இயற்பியலாளரான ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் 1831ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்கில் பிறந்தார்.
இவர் மின்காந்தவியல் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு முதன்முதலில் மின்காந்த அலைகள் இருப்பதற்கான ஆதாரங்களைப் பரிசோதனை மூலம் நிரூபித்தார்.
மேலும் 1865ஆம் ஆண்டு மின்காந்தவியல் கோட்பாட்டை உருவாக்கினார்.
வாயுக்களின் இயக்கக் கோட்பாட்டை விளக்குவதற்காக புள்ளியியல் முறையை உருவாக்கினார்.
இது Maxwell-Boltzmann distribution எனக் குறிப்பிடப்படுகிறது.
ஐன்ஸ்டீனின் பாராட்டு:
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒருமுறை, நான் நியூட்டனின் தோள்களின் மேல் நிற்கவில்லை, மாக்ஸ்வெல்லின் தோள்களின் மேல் தான் நிற்கிறேன் என்று இவரின் பெருமையைக் குறிப்பிட்டுள்ளார்.
இவருடைய மின்காந்த சமன்பாடுகளின் கண்டுபிடிப்பு இல்லையென்றால் இன்றைய ரேடியோ, தொலைக்காட்சி, ரேடார், மொபைல் போன்கள் மற்றும் வைஃபை (Wi-Fi) போன்ற வயர்லெஸ் தொழில்நுட்பங்கள் சாத்தியமாகியிருக்காது.
பாயத்தை (Magnetic Flux) அளவிடும் சிஜிஎஸ் அலகுக்கு 'மாக்ஸ்வெல்' (Mx) என்று பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், விண்வெளியில் உள்ள ஒரு தொலைநோக்கிக்கும் இவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
வெப்ப இயக்கவியலில் வாயு மூலக்கூறுகளின் வேகம் மற்றும் பரவலை விளக்கும் மாக்ஸ்வெல்-போல்ட்ஸ்மேன் விநியோகம் (Maxwell-Boltzmann distribution) என்ற விதியை உருவாக்கினார்.
இறுதிவரை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தவரும், தலைசிறந்த விஞ்ஞானியுமான ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல், 1879ஆம் ஆண்டு மறைந்தார்.
Hindusthan Samachar / Durai.J