பெயிண்ட் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
சென்னை, 13 ஜூன் (ஹி.ச.) சென்னை திருவேற்காடு வேலப்பன்சாவடி பத்மாவதி கார்டன் பகுதியில் மாத்திரை குடோன் மற்றும் பெயிண்ட் குடோன் ஆனது செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் இன்று அதிகாலை திடீரென கரும்பொகை எழுந்துள்ளது. உடனடியாக அக்கம் பக்கத்தில் வசிக்
Fire


சென்னை, 13 ஜூன் (ஹி.ச.)

சென்னை திருவேற்காடு வேலப்பன்சாவடி பத்மாவதி கார்டன் பகுதியில் மாத்திரை குடோன் மற்றும் பெயிண்ட் குடோன் ஆனது செயல்பட்டு வருகிறது.

இந்த குடோனில் இன்று அதிகாலை திடீரென கரும்பொகை எழுந்துள்ளது.

உடனடியாக அக்கம் பக்கத்தில் வசிக்கும் பகுதி மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலின் அடிப்படையில் பூந்தமல்லி மற்றும் மதுரவாயில் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு துறை வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மாத்திரை எரிவதால் அருகில் உள்ளவர்களுக்கு கண் எரிச்சல் மூச்சு திணறல் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக வானகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN