மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - நகை பிரியர்கள் அதிர்ச்சி
சென்னை, 13 ஜூன் (ஹி.ச.) ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது. அந்த வகையில் நேற்று ( ஜூன் 12) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,800க்கும் சவரனுக்கு ரூ.2,400 உயர
தங்கம்


சென்னை, 13 ஜூன் (ஹி.ச.)

ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது.

அந்த வகையில் நேற்று

( ஜூன் 12) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,800க்கும் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,10,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன் படி இன்று ( ஜூன் 13) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,860க்கும் சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.270க்கும், ஒரு கிலோ ரூ.2,75,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P