கள்ளக்குறிச்சியில் நகை அடகு கடையில் 50 சவரன் நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளை
கள்ளக்குறிச்சி, 13 ஜூன் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் நகரில் காவல் நிலையம் அருகே செயல்பட்டு வந்த நகை அடகு கடையில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தியாகதுருகம் பகுதியில் ராமச்சந்திரன் என்
கொள்ளை


கள்ளக்குறிச்சி, 13 ஜூன் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் நகரில் காவல் நிலையம் அருகே செயல்பட்டு வந்த நகை அடகு கடையில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தியாகதுருகம் பகுதியில் ராமச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான நகை அடகு கடை இயங்கி வருகிறது. இந்தக் கடை தியாகதுருகம் காவல் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், கடையில் இருந்த சுமார் 400 கிராம் (50 சவரன்) தங்க நகைகள், 15 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.50 லட்சத்திற்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். கள்ளக்குறிச்சி டிஎஸ்பி மனோகர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

காவல் நிலையம் அருகிலேயே நடைபெற்ற இந்த துணிச்சலான கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P