Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு , 13 ஜூன் (ஹி.ச.)
கர்நாடக அரசியலில் முதல்வர் பதவி தொடர்பான பழைய விவகாரம் மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
துணை முதல்வராக உள்ள ஜி. பரமேஸ்வரா அவர்கள், தமக்கு மூன்று முறை முதல்வர் பதவி கைதவறியதாக வேதனை தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
உங்களுக்கு முதல்வர் பதவி கிடைக்காமல் போனதற்கு காரணம் உங்கள் கட்சியிலேயே உள்ளவர்கள் தான்.
இதை எங்களிடம் கேட்பதை விட, உங்கள் கட்சிக்குள் சென்று பேசுங்கள்.”
அன்று நீங்கள் என்னுடன் வந்தபோது, நான் ‘முதல்வராக வேண்டாம்’ என்று சொல்லவில்லை.
மாறாக ‘நீங்களே முதல்வராகுங்கள்’ என்று தான் கூறினேன். ஆனாலும் அந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கவில்லை.
இந்த கருத்து தற்போது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA