கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக மிதக்கும் ரசாயன நுரைகள்- விவசாயிகள், பொதுமக்கள் அதிர்ச்சி
கிருஷ்ணகிரி, 13 ஜூன் (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே கெலவரப்பள்ளி அணைக்கு தற்போது விநாடிக்கு 918 கனஅடி நீர் வரத்து இருந்து வரும் நிலையில், அணையிலிருந்து விநாடிக்கு 1,080 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த
நுரை


கிருஷ்ணகிரி, 13 ஜூன் (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே

கெலவரப்பள்ளி அணைக்கு தற்போது விநாடிக்கு 918 கனஅடி நீர் வரத்து இருந்து வரும் நிலையில், அணையிலிருந்து விநாடிக்கு 1,080 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆற்றில் செல்லும் நீருடன் வெண்மையான ரசாயன நுரைகள் குவியல் குவியலாக மிதந்து செல்வது காணப்படுகிறது.

மழைக்காலங்களில் கர்நாடக மாநில எல்லைப் பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் தென்பெண்ணை ஆற்றில் கலப்பதாக நீண்டகாலமாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இதன் காரணமாகவே ஆற்றில் நுரை உருவாகும் நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது அணை மற்றும் ஆற்றுப் பகுதிகளில் நுரைகள் பெருமளவில் தேங்கி காணப்படுவதுடன், பல இடங்களில் பனிக்கட்டிகள் மிதந்து செல்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், காற்றின் வேகத்தால் நுரைகள் சுழன்று சுழன்று அருகிலுள்ள விவசாய நிலங்கள், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் பறந்து விழுகின்றன.

இதனால் ஆடு, மாடுகள் மேய்ச்சல் பகுதிகளில் உள்ள புற்களை உண்ணத் தயங்குவதாகவும், தரைப்பாலம் மற்றும் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மீதும் நுரைகள் விழுவதால் சிரமம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam