Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஜூன் (ஹி.ச)
அரசுமுறை பயணமாக தென் கொரியா சென்றுள்ள தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, அந்நாட்டின் முன்னணி ஏடிஎம் தொழில்நுட்ப நிறுவனமான Hyosung TNS நிறுவனத்தை பார்வையிட்டு அதன் தலைமை நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது,
தமிழகத்தில் ஏடிஎம் இயந்திரங்கள் தயாரிப்பதற்கான புதிய உற்பத்தி ஆலையை அமைப்பது தொடர்பாக ஹையோசங் TNS நிறுவனம் தீவிரமாக பரிசீலித்து வருவதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் முதலீடு மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு உகந்த தொழில் சூழல், திறமையான மனிதவளம் மற்றும் உலகத் தரத்திலான கட்டமைப்பு வசதிகள் உள்ளதாகவும், ஹையோசங் TNS நிறுவனத்தின் முதலீட்டு முயற்சிக்கு தமிழக அரசு முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
இந்த முதலீடு உறுதியாகும் பட்சத்தில், தமிழகத்தில் ஏடிஎம் உற்பத்தித் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுவதோடு, மின்னணு உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ