Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 13 ஜூன் (ஹி.ச.)
தமிழக நிதி அமைச்சரும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான மரிய வில்சன் இன்று சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அவருக்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் அமைந்துள்ள பணிமய மாதா பேராலயம் சென்று வழிபாடு மேற்கொண்ட அமைச்சர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
உலகப் புகழ்பெற்ற பணிமய மாதா பேராலயத்திற்கு ஆண்டுதோறும் வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் மாதாவை தரிசனம் செய்து, இங்கிருந்து எனது பணிகளைத் தொடங்குகிறேன்.
தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்” என்றார்.
மேலும், தமிழக அரசின் அடுத்த பட்ஜெட் குறித்து பேசிய அவர், “தமிழக பட்ஜெட்டை விரைவில் எதிர்பார்க்கலாம். இந்த பட்ஜெட் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சிறப்பாக அமையும். அதேபோல், தமிழகத்தின் தற்போதைய நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை விரைவில் தமிழக முதல்வர் வெளியிடுவார் என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam