Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 ஜூன் (ஹி.ச.)
வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவை சில்லறை பெட்ரோல் விற்பனை நிலையங்களில் மொத்தமாக பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதை தடை செய்யும் வகையில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் (Ministry of Petroleum and Natural Gas) வெளியிட்டுள்ள உத்தரவின்படி,
இனி தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது தேவைக்காக சில்லறை பங்குகளில் bulk ஆக எரிபொருள் வாங்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக, அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட மொத்த விற்பனை நிலையங்கள் மூலம் மட்டுமே பெட்ரோல், டீசலை வாங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு வாகனத்திற்கு 200 லிட்டர் உச்சவரம்பு
மேலும், ஒரு வாகனத்திற்கு தினமும் அதிகபட்சம் 200 லிட்டர் வரை மட்டுமே எரிபொருள் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதை மீறி வாங்கப்பட்ட எரிபொருளை மறுவிற்பனை செய்யக்கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
90 நாட்கள் அமல்
இந்த கட்டுப்பாடுகள் முதற்கட்டமாக 90 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும், பின்னர் தேவையைப் பொருத்து நீட்டிக்கப்படலாம் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தட்டுப்பாட்டை தடுக்கும் நடவடிக்கை
சில பகுதிகளில் வணிக பயன்பாட்டிற்காக அதிக அளவில் சில்லறை நிலையங்களில் எரிபொருள் வாங்கப்பட்டதால் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தடுக்கும் நோக்கிலும், சந்தை விலையை தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA