Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 13 ஜூன் (ஹி.ச.)
பிரதமர் நரேந்திர மோடி 6 நாள் அரசு முறை பயணமாக இன்று பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு புறப்படுகிறார்.
இந்த பயணத்தின் போது அவர் முக்கியமான 52-வது ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறார்.
இது குறித்து, வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்ததாவது,
ஜூன் 13 முதல் 19 வரை நடைபெறும் இந்த ஐரோப்பிய பயணத்தின் ஒரு பகுதியாக பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகள் இடம்பெற்றுள்ளன.
பிரான்ஸ் பயணத்தின் முக்கிய நிகழ்வாக நாளை (14-ம் தேதி) பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்தியா–பிரான்ஸ் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும், முதலீடு, வர்த்தகம் மற்றும் வென்ச்சர் கேப்பிட்டல் போன்ற துறைகளில் புதிய ஒத்துழைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் இரு தலைவர்களும் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணம் இந்தியாவின் ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA