ராமநாதபுரம் அருகே சங்கிலித் தொடர் விபத்து - 4 வாகனங்கள் மோதியதில் 5 பேர் காயம்
ராமநாதபுரம், 13 ஜூன் (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் ஒன்று, ராமநாதபுரம் அருகே பாப்பாக்குடி பகுதியில் திடீரென பஞ்சர் ஆனதால் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, பஞ்
Accident


ராமநாதபுரம், 13 ஜூன் (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் ஒன்று, ராமநாதபுரம் அருகே பாப்பாக்குடி பகுதியில் திடீரென பஞ்சர் ஆனதால் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து, பஞ்சரை சரிசெய்ய மற்றொரு வாகனம் அங்கு நிறுத்தப்பட்டு பழுதுபார்ப்பு பணி நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது தூத்துக்குடியில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, சாலையோரத்தில் நின்றிருந்த வாகனங்களை கவனிக்காமல் நேராக மோதியது. இந்த மோதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பின்னால் வந்த கார் ஒன்று லாரியின் மீது மோதியது. பலத்த தாக்கம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நொடிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த விபத்தில் மொத்தம் நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்டதால், கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் கார் பயணிகள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். அவர்களில் சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்தில் சேதமடைந்த வாகனங்களை அகற்றும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு

வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN