Enter your Email Address to subscribe to our newsletters

வாஷிங்டன், 13 ஜூன் (ஹி.ச.)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் மிட்லேண்ட் நகரில் உள்ள மருத்துவமனை அருகே நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், தாக்குதல் நடத்திய நபர் மருத்துவமனை அருகே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது பின்னர் தெரியவந்தது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கான காரணம் குறித்து மிட்லேண்ட் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b