Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 13 ஜூன் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் உள்ள 4 அருவிகளில் தற்போது குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்து வரும் தொடர் சாரல் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வந்தன.
அந்த வகையில், குற்றாலம் பகுதியில் உள்ள பழைய குற்றால அருவி, ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், நீர்வரத்து குறைந்ததை அடுத்து ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது பழைய குற்றால அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பராமரிப்பு பணிகள் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் இதுவரை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படாத நிலையில், பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்ற பின்னர் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தருவார்கள் என்பதால் குற்றாலம் பகுதியில் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்பு பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN