Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஜூன் (ஹி.ச.)
தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் ஜூன்
14-ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலில் நடைபெற உள்ளதாக கட்சித் தலைவர்
ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காலை 10 மணிக்கு தனது தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் துணை அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த பிறகு நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் என்பதால், கட்சியின் எதிர்கால செயல்திட்டங்கள் மற்றும் இயக்கம் தொடர்பான முக்கிய ஆலோசனைகள் இதில் மேற்கொள்ளப்பட உள்ளன என்றும் கூறியுள்ளார்.
மேலும், தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்தின் தொடர்ச்சியான பயணத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று ஜி.கே. வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P