Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 14 ஜூன் (ஹி.ச)
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருந்த நடிகை கௌதமி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு மற்றும் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
தற்போது நிலவும் அரசியல் சூழலை கருத்தில் கொண்டு சமூக சேவையில் ஈடுபட ஏதுவாக, கனத்த இதயத்துடன் கட்சிப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சியில் இணைந்த நாள் முதல் இன்று வரை தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாநில, மாவட்ட, வட்ட, பகுதி, ஒன்றிய மற்றும் நகரக் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து, அவர்களை மனதார வணங்குவதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை கௌதமியின் இந்த அறிவிப்பு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ