திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.31 லட்சம் மதிப்புள்ள லாரி காணிக்கை
திருமலை, 14 ஜூன் (ஹி.ச.) கனரக வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமான அசோக் லேலண்ட், திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.31 லட்சத்து 72 ஆயிரத்து 532 மதிப்புள்ள லாரி ஒன்றை காணிக்கையாக வழங்கியுள்ளது. திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் முன்பு இதற்கான
A


திருமலை, 14 ஜூன் (ஹி.ச.)

கனரக வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமான அசோக் லேலண்ட், திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.31 லட்சத்து 72 ஆயிரத்து 532 மதிப்புள்ள லாரி ஒன்றை காணிக்கையாக வழங்கியுள்ளது.

திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் முன்பு இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் குமார், லாரிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினார். பின்னர் லாரியின் சாவியை திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் சி. வெங்கையா சவுத்ரியிடம் முறையாக ஒப்படைத்தார்.

தேவஸ்தானத்தின் பல்வேறு சேவை மற்றும் போக்குவரத்து பணிகளுக்காக இந்த லாரி பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான போக்குவரத்து பிரிவு பொறுப்பு பொது மேலாளர் லட்சுமி பிரசன்னா, போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணையா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA