ஆந்திராவில் நீர்வளப் பணிகள் ஜூன் இறுதிக்குள் பணிகள் முடிக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு
அமராவதி, 14 ஜூன் (ஹி.ச.) ‘ஜலதாரா–ஜலஹாரதி’ திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆய்வு நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர்கள், நீர்வளத் துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகள் கலந்
A


அமராவதி, 14 ஜூன் (ஹி.ச.)

‘ஜலதாரா–ஜலஹாரதி’ திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆய்வு நடைபெற்றது.

இதில் மாவட்ட கலெக்டர்கள், நீர்வளத் துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகள் கலந்து கொண்டனர். மேலும் அமைச்சர் நிம்மல ரமணாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய முதல்வர்,

ஆந்திரப் பிரதேசத்தில் நீர்வள பாதுகாப்பு மற்றும் கோலுசுக்கட்டு குளங்கள் மறுசீரமைப்பு பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

MGNREGS நிதியை திறம்பட பயன்படுத்தி செக் டேம், மழைநீர் சேகரிப்பு குழிகள், பண்ணை குளங்கள் உள்ளிட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

நிலுவையில் உள்ள அனைத்துப் பணிகளையும் 2026 ஜூன் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என அவர் அதிகாரிகளுக்கு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீர் அதிகமுள்ள பகுதிகளையும் நீர் பற்றாக்குறை பகுதிகளையும் இணைக்கும் திட்டங்களை முன்னெடுக்கவும் அவர் உத்தரவிட்டார்.

மேலும் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை அகற்றி வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், பணிகள் தரமாகவும் தாமதமின்றியும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்தத் திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர்மட்ட உயர்வு மற்றும் சுற்றுச்சூழல் பலன்கள் குறித்து மாவட்ட வாரியாக மதிப்பீடு செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள், விவசாயிகள் மற்றும் நீர் பயனாளர் சங்கங்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA