200-க்கும் மேற்பட்ட காவலர்களிடம் மோசடி வழக்கு - ராயபுரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஷீலா மேரி பணியிடை நீக்கம்
சென்னை, 14 ஜூன் (ஹி.ச.) குறைந்த விலையில் தங்கக் காசுகள் மற்றும் வீட்டுமனைகள் வழங்குவதாகக் கூறி 200-க்கும் மேற்பட்ட காவலர்களிடம் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட நபருக்கு உடந்தையாக இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ராயபுரம் அனைத்து மகளிர
பணியிடை நீக்கம்


சென்னை, 14 ஜூன் (ஹி.ச.)

குறைந்த விலையில் தங்கக் காசுகள் மற்றும் வீட்டுமனைகள் வழங்குவதாகக் கூறி 200-க்கும் மேற்பட்ட காவலர்களிடம் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட நபருக்கு உடந்தையாக இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஷீலா மேரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணியாற்றி வரும் 200-க்கும் மேற்பட்ட காவலர்களிடம், குறைந்த விலையில் தங்கக் காசுகள் மற்றும் வீட்டுமனைகள் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பிரபு மணி என்பவர் மீது புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில்,

பிரபு மணி கடந்த செவ்வாய்க்கிழமை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில், அவருக்கு சிலர் ஆதரவாகவும் உடந்தையாகவும் செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், வழக்கில் தொடர்புடையவராகவும், மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஷீலா மேரியை பணியிடை நீக்கம் செய்து சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மோசடி வழக்கின் பின்னணி மற்றும் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam