Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 14 ஜூன் (ஹி.ச.)
துபாயில் இருந்து இன்று அதிகாலை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.
அப்போது மூன்று பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததையடுத்து, அவர்களது உடைமைகளை தனியாக எடுத்து விரிவான சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், உடைமைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல்வேறு பிராண்டுகளைச் சேர்ந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் உயர்ரக செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.22.67 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுங்க வரி செலுத்தாமல் பொருள்களை கடத்தி வர முயன்ற குற்றத்திற்காக மூன்று பயணிகளும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த பொருள்கள் எங்கிருந்து கொள்முதல் செய்யப்பட்டன, யாருக்காக கொண்டு வரப்பட்டன என்பது குறித்தும் சுங்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.
சமீப காலமாக திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம், சிகரெட், மின்னணு சாதனங்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருவதால், சுங்கத்துறையினர் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b