விவசாய தம்பதி மீது தாக்குதல் - சேலம் த.வெ.க நிர்வாகி மீது புகார்
தாரமங்கலம், 14 ஜூன் (ஹி.ச.) அமரகுந்தி கிராமத்தில் விவசாய தம்பதி மீது தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள அமரகுந்தியைச் சேர்ந்த விவசாயிகளான அர
Complaint against Salem TVK functionary


தாரமங்கலம், 14 ஜூன் (ஹி.ச.)

அமரகுந்தி கிராமத்தில் விவசாய தம்பதி மீது தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள அமரகுந்தியைச் சேர்ந்த விவசாயிகளான அருணாச்சலம் மற்றும் அவரது மனைவி வசந்தா ஆகியோர், அதே பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகியான முத்தண்ணன் என்பவரால் தாக்கப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நாட்களாக இருந்துவந்த வழித்தடம் தொடர்பான பிரச்சினை நேற்று முன்தினம் முற்றிய நிலையில், வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.

இந்த மோதலில் அருணாச்சலம்-வசந்தா தம்பதியை, த.வெ.க நிர்வாகி முத்தண்ணன் கடுமையாக தாக்கியதாக பாதிக்கப்பட்ட தரப்பு தெரிவித்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த தம்பதியினர் தாரமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரவலான கவனத்தை ஈர்த்துள்ளன.

அந்த காட்சிகளில், முத்தண்ணன் தம்பதியை தாக்கும் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

சிசிடிவி ஆதாரங்களை கைப்பற்றி ஆய்வு செய்து வரும் காவல்துறையினர், சம்பந்தப்பட்ட த.வெ.க நிர்வாகி முத்தண்ணனிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அரசியல் கட்சி நிர்வாகி ஒருவர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b