திமுக ஆட்சியை விட தவெக ஆட்சியில் மின் கட்டணம் குறைவு - எழிலன் பதிவுக்கு மின் வாரியம் விளக்கம்
சென்னை, 14 ஜூன் (ஹி.ச.) திமுக மருத்துவர் அணி செயலாளர் எழிலன் வெளியிட்ட மின் கட்டண தொடர்பான பதிவுக்கு தமிழ்நாடு மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதில், 490 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் ஒரு வீட்டு மின் நுகர்வோரிடம், திமுக ஆட்சிக் காலத்தில் ரூ
Eb


Jh


சென்னை, 14 ஜூன் (ஹி.ச.)

திமுக மருத்துவர் அணி செயலாளர் எழிலன் வெளியிட்ட மின் கட்டண தொடர்பான பதிவுக்கு தமிழ்நாடு மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

அதில்,

490 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் ஒரு வீட்டு மின் நுகர்வோரிடம், திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.1,742 மின் கட்டணமாக வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே அளவு மின்சார பயன்பாட்டிற்கு தற்போதைய தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் ரூ.1,507 மட்டுமே மின் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் குறிப்பிட்டுள்ளது.

இதன் மூலம் திமுக ஆட்சிக் காலத்தை ஒப்பிடும்போது, தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் 490 யூனிட் மின் பயன்பாட்டிற்கு ரூ.235 குறைவாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டண உயர்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்கள் தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், நடைமுறையில் உள்ள கட்டண விவரங்களின் அடிப்படையில் தற்போதைய ஆட்சியில் நுகர்வோருக்கு குறைந்த கட்டணமே விதிக்கப்படுவதாகவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ