Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஜூன் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை முன்னிட்டு, ஆளுநர் உரை தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் ஜூன் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து திமுக சட்டமன்றக் கொறடா எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை கூட்டத் தொடரின் தொடக்க நாளில் ஆளுநர் ஆற்றவுள்ள உரை மற்றும் அதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஆளுநர் உரை மீதான விவாதம், அரசின் கொள்கை நிலைப்பாடுகள் மற்றும் சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய ஆலோசனைகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கொறடா எ.வ.வேலு கேட்டுக் கொண்டுள்ளார்.
வரவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு முன்பாக நடைபெறும் இந்தக் கூட்டம், அரசியல் ரீதியாகவும் சட்டமன்ற நடவடிக்கைகள் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P