நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.20 ஆக நிர்ணயம் - சென்னையில் சில்லறை விலை ரூ.6.90
நாமக்கல், 14 ஜூன் (ஹி.ச.) தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு இன்று நடத்திய கூட்டத்தில், நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு முட்டை ரூ.6.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய விலை ரூ.6.10 ஆக இருந்த நிலைய
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.20 ஆக நிர்ணயம் - சென்னையில் சில்லறை விலை ரூ.6.90


நாமக்கல், 14 ஜூன் (ஹி.ச.)

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு இன்று நடத்திய கூட்டத்தில், நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு முட்டை ரூ.6.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலை ரூ.6.10 ஆக இருந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு பண்ணையாளர்களுக்கு சற்று நிம்மதி அளித்துள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் தீவன செலவு மற்றும் கோடை வெப்பம் காரணமாக உற்பத்தி குறைந்துள்ளதால், விலை உயர்வு அவசியமானது என பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தேவை அதிகரிப்பு மற்றும் வட மாநிலங்களுக்கான ஏற்றுமதி சீராக உள்ளதாலும் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

இதேவேளை, சென்னை மண்டலத்தில் சில்லறை விற்பனை விலையும் 10 காசுகள் உயர்ந்து, ஒரு முட்டை ரூ.6.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

கொள்முதல் விலை உயர்வு மற்றும் போக்குவரத்து செலவு அதிகரிப்பு ஆகியவை சில்லறை விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளன.

இதற்கிடையில், நாமக்கல் சந்தையில் கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.120 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோழிப்பண்ணைத் தொழில் முக்கியத்துவம் வாய்ந்த நாமக்கல் மண்டலத்தில் முட்டை மற்றும் கறிக்கோழி விலை நிலவரம் தினசரி மாற்றங்களை சந்தித்து வருகிறது.

Hindusthan Samachar / vidya.b