Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஜூன் (ஹி.ச)
தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கம் சார்பில் நாளை மாநிலம் தழுவிய போராட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக சங்கம் காவல்துறையிடம் அனுமதி பெறும் கடிதத்தில்,
தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக, தமிழ்நாடு முழுவதும் பணிபுரியும் கேங்மேன் பணியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக
(Field Assistant) பதவி மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல ஆண்டுகளாக சட்டபூர்வமான மற்றும் ஜனநாயக வழியிலான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதன் தொடர்ச்சியாக, மின்வாரிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் கேங்மேன் பணியாளர்களை பதவி மாற்றம் செய்வது 616 ஒப்பந்தம் எட்டப்பட்டு, (SECRETARIAT BRANCH) (PER) FB TNPDCL PROCEEDINGS No.7, DATED:14.03.2026-ன் படிஆணை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தாகி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும், இதுவரை அதனை செயல்படுத்தும் வகையில் எந்தவித உறுதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாததால், தமிழ்நாடு முழுவதும் உள்ள கேங்மேன் பணியாளர்களிடையே மிகுந்த மனஉளைச்சலும், ஏமாற்றமும், அதிருப்தியும் நிலவி வருகிறது.
எனவே, இந்த காலதாமதத்தை கண்டித்தும், ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்ட உறுதியை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக, 15.06.2026 (திங்கட்கிழமை) காலை 10.00 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சங்கத்தின் மாநில, மாவட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட கேங்மேன் பணியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
ஆர்ப்பாட்டம் முழுமையாக அமைதியான முறையிலும், சட்டம் மற்றும் ஒழுங்குக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலும், ஜனநாயக முறையில் நடைபெறும் என்பதை உறுதியளிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN