தவெக அரசை விமர்சிக்கும் தகுதி திமுகவுக்கு துளிகூட இல்லை - கணபதி சிவக்குமார்
சென்னை, 14 ஜூன் (ஹி.ச.) காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவகுமார் திமுக குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்., அந்த அறிக்கையில் அறிக்கையில் கூறியிருப்பதாவது, 75 ஆண்டுகால பாரம்பர்யம் கொண்ட திமுகவை கடந்த சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்தி,
Ganapathy Sivakumar


சென்னை, 14 ஜூன் (ஹி.ச.)

காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவகுமார் திமுக குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.,

அந்த அறிக்கையில் அறிக்கையில் கூறியிருப்பதாவது,

75 ஆண்டுகால பாரம்பர்யம் கொண்ட திமுகவை கடந்த சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்தி, மகத்தான வெற்றிபெற்றது தவெக. மட்டுமன்றி, ’’ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு’’ என்ற தன் விக்கிரவாண்டி மாநாட்டின் பேச்சையும் செயல்படுத்தியுள்ளார் மாண்புமிகு முதல்வர் அவர்கள்.

இந்நிலையில் தேர்தல் தோல்வியை ஜீரணித்துக் கொள்ளமுடியாமல் தங்களுக்கே உரிய பாணியில் அவதூறுக் கருத்துக்களை அள்ளிவீசத் தொடங்கியுள்ளது திமுக. அதிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக மகளிரணி மற்றும் தொண்டரனி கூட்டத்தில் வாய்க்கு வந்ததை பேசியுள்ளார்.

தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் எனமக்கள் நினைப்பதாக மு.க.ஸ்டாலின் பேசி இருப்பது அபத்தத்தின் உச்சம்! உண்மையில் 108 இடங்களை கொடுத்த மக்கள் தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை கொடுக்காமல் போய்விட்டோமே என்றுதான் வருத்தத்தில் உள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் அமைச்சர்கள் குறுநில மன்னர்கள் போல் செயல்பட்டனர். பேரறிஞர் அண்ணா அவர்கள் கட்டியெழுப்பப்பட்ட திமுக கோட்டையில் கருணாநிதி, அவருக்குப் பின்பு திமுக தலைவராக மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளாராக உதயநிதி, கட்சியின் அதிகாரமிக்க பொறுப்புகளில் கனிமொழி, தயாநிதி மாறன், வியூகம் வகுக்க மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் என ஒரு டஜன் குடும்ப உறவுகளை வைத்துக்கொண்டு உண்மையான தொண்டர்களை அழித்ததன் விளைவுதான் திமுகவின் தேர்தல் தோல்விக்குக் காரணம்!

ஆனால் அதை உணராமல் மக்களின் அன்பினாலும், தவெக தலைவர் தளபதி அவர்களின் தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கையாலும் பெருவாரியான மக்கள் வாக்களித்ததால் தான் தவெக வென்றுள்ளது.அந்த வகையில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் நான்குபேர், அதிமுக தலைமையின் மீது நம்பிக்கை இழந்து, தவெகவின் நல்லாட்சியில் ஈர்க்கப்பட்டு தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

இதை புரிந்துகொள்ள முடியாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக எம்.எல்.ஏக்களை ஷாப்பிங் செய்ததாக சொல்வது, திமுகவின் புலம்பலையே காட்டுகிறது. 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் கம்பம் ராமகிருஷ்ணன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் கூட திமுக ஷாப்பிங் தான் செய்ததா?

இவ்வளவு ஏன் 2021 ஆம் ஆண்டுமுதல் கடந்த 5 ஆண்டுகாலம் திமுக ஆட்சியில் இருந்தபோது, தங்கள் பதவியை ராஜினாமா செய்தும், செய்யாமலும் திமுகவில் இணைந்த ஓ.பன்னீர் செல்வம், ஒரத்தநாடு வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரையும் திமுக ஷாப்பிங் தான் செய்ததா?

தவெக மீது அவதூறு பரப்ப வேண்டும் என்னும் தன் அரசியல் சுயநலத்திற்காக ஜனநாயத்தை கேலிக் கூத்தாக்கும் வகையில் பேசி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைக் கண்டிக்கிறேன்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN