214 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் - தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை, 14 ஜூன் (ஹி.ச.) தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்களை நியமிப்பதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலம
Hrce


Jj


சென்னை, 14 ஜூன் (ஹி.ச.)

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்களை நியமிப்பதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர்

ச.ஜோசப் விஜய் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ. ரமேஷ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அறங்காவலர் நியமனம் செய்யப்படவுள்ள திருக்கோயில்களின் பட்டியல், தகுதிகள் மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகிய விவரங்கள் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்

வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் இணையவழியில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.

மேலும், இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகங்களுக்கு நேரிலோ அல்லது விரைவஞ்சல்

(Speed Post) மூலமாகவோ அனுப்பலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 22 ஜூலை 2026 மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ