Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 14 ஜூன் (ஹி.ச.)
தூத்துக்குடி ஆனந்தநகர் பகுதியில் செயல்பட்டு வரும் சிஎஸ்ஐ தேவாலயத்தில் அருள்ராஜ் என்பவர் மதபோதகராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தேவாலயத்திற்கு வழக்கமாக வந்து சென்ற 12 வயது சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், சம்பவம் தொடர்பான தகவல்களும் சேகரிக்கப்பட்டன.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் மதபோதகர் அருள்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் முடிவு செய்தனர்.
இதையடுத்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அருள்ராஜ் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN