Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஜூன் (ஹி.ச.)
கோவை மதுக்கரை அருகே திருமாலயம்பாளையத்தைச் சேர்ந்த மோனிகா என்ற தனியார் கல்லூரி ஊழியரிடம், முன்னாள் வாடகைதாரர்களான விஸ்வநாதன் - ஷோபா தம்பதி, கோவில் பிரசாதம் தருவதாக கூறி கல்லூரி வளாகத்திற்கு வரவழைத்துள்ளனர்.
அங்கு காரில் வந்த அவர்கள், மோனிகாவை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்று, அவரது தாலிக்கொடி, செயின் மற்றும் மோதிரங்களை பறித்துள்ளனர்.
பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மோனிகாவை இறக்கிவிட்டு தப்பிச் சென்ற நிலையில், அவரது புகாரின் பேரில் க.க.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
எட்டிமடை மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், கேரளாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற விஸ்வநாதன் - ஷோபா தம்பதியை கைது செய்து, அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நகைகளை பறிமுதல் செய்தனர்.
சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ