பெங்களூரு வளர்ச்சி துறை அதிகார தெளிவு கிடைத்த பிறகே பொறுப்பேற்பேன் – கிருஷ்ண பைரேகவுடா
பெங்களூரு , 14 ஜூன் (ஹி.ச.) பெங்களூரு வளர்ச்சி துறை தொடர்பான அதிகாரங்கள் குறித்து முழு தெளிவு கிடைத்த பிறகே துறை பொறுப்பை ஏற்றுக்கொள்வேன் என்று அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் அலுவலகத்தில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அ
A


பெங்களூரு , 14 ஜூன் (ஹி.ச.)

பெங்களூரு வளர்ச்சி துறை தொடர்பான அதிகாரங்கள் குறித்து முழு தெளிவு கிடைத்த பிறகே துறை பொறுப்பை ஏற்றுக்கொள்வேன் என்று அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் அலுவலகத்தில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பெங்களூரு வளர்ச்சி அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தாலும், அவர் இதுவரை அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கவில்லை.

இந்நிலையில், துறை அதிகாரப் பகிர்வு தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் விவாதம் நிலவி வருகிறது.

பெங்களூரு வளர்ச்சி ஆணையம் (BDA) மற்றும் பெங்களூரு மாநகர பகுதி வளர்ச்சி ஆணையம் (BMRDA) ஆகிய முக்கிய அமைப்புகள் முதல்வர் டி.கே. சிவகுமார் அவர்களின் கட்டுப்பாட்டில் தொடர்வதாக கூறப்படும் நிலையில், துறை அதிகாரங்கள் குறித்து தெளிவு தேவைப்படுவதாக கிருஷ்ண பைரேகவுடா கூறியுள்ளார்.

“பெங்களூரு வளர்ச்சி என்பது மிகப் பெரிய பொறுப்பு. மக்கள் மற்றும் அரசின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டுமெனில் துறையின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து முழு தெளிவு அவசியம். எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. ஆனால் இது ஒரு பெரிய பொறுப்பு.

வெறும் பதவியாக நான் இதைப் பார்க்கவில்லை, என்றார்.

அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்காத நிலையில், அவர் நடைபெற்ற உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் தனியார் வாகனத்தில் கலந்து கொண்டார்.

மேலும், சமீபத்தில் அவர் டெல்லிக்கு சென்று காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்ததுடன், நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் டி.கே. சிவகுமாருடன் பங்கேற்றார்.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் நிகழ்விலும் அவருடன் இருந்தார்,

என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA