கேரளாவில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் நாளை முதல் ‘பிரியதர்ஷினி’ திட்டம் அமல்
திருவனந்தபுரம், 14 ஜூன் (ஹி.ச.) கேரளாவில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யும் ‘பிரியதர்ஷினி’ திட்டம் நாளை (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி
K


திருவனந்தபுரம், 14 ஜூன் (ஹி.ச.)

கேரளாவில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யும் ‘பிரியதர்ஷினி’ திட்டம் நாளை (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யு.டி.எப்.) ஆட்சிக்கு வந்தால், கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு (கே.எஸ்.ஆர்.டி.சி.) சொந்தமான பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண வசதி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது.

அதன்படி, மாநில அமைச்சரவை பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பஸ் பயணச் சலுகை வழங்க முடிவு செய்தது. இந்த திட்டத்தை முதல்-மந்திரி சதீசன் நாளை தொடங்கி வைக்கிறார்.

7 வகை பஸ்களில் சலுகை

இந்த திட்டத்தின் கீழ் 7 வகையான சாதாரண அரசு பஸ்களில் பெண்களும், திருநங்கைகளும் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவச பயண வசதி வழங்கப்படும் பஸ்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் அவற்றில் சிறப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட உள்ளன.

சாதாரண அரசு பஸ், நகர பஸ், வரையறுக்கப்பட்ட நிறுத்தங்களைக் கொண்ட சாதாரண அரசு பஸ், சீர்நிலை சாதாரண அரசு பஸ், டவுன் டூ டவுன் பஸ், பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ் மற்றும் கிராமவண்டி சேவைகள் ஆகியவற்றில் இந்த சலுகை அமல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டம் மூலம் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் திருநங்கைகள் பயனடைவார்கள் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA