Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 14 ஜூன் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை எதிரொலியால் கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் தென்பெண்ணை ஆற்று கரையோர வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கே ஆர் பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து தற்போது அனைத்து நீர்வரத்து 611 கன அடியாக உள்ளது. இந்த நிலையில் நீர் வரத்து மேலும் உயரக்கூடும் என்பதால் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் நீர் திறப்பு படிப்படியாக உயர்த்தவும் வாய்ப்பு உள்ளது.
அணையின் முழு கொள்ளளவான 52 அடியில் தற்போது அணையின் நீர்மட்டம் 50. 10 அடியாக அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
தற்போது அணைக்கு நீர்வரத்து 611 கன அடியாகவும் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் நீர் திறப்பு 369 கன அடியாகவும் உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN