Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 14 ஜூன் (ஹி.ச.)
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்கும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசை தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அதிகளவிலான பக்தர்கள் வருகையால் ரோப்கார் நிலையம், வின்ச் நிலையம் மற்றும் மலைக்கோவில் செல்லும் பாதைகளை குடமுழுக்கு நினைவரங்கம வழியாக மலைக்கோவிலுக்கு செல்லும் வகையிலும் , கீழே இறங்கி வர படிப்பாதை வழி என ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யபட்டுள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
பொது தரிசன வரிசையில் நின்ற பக்தர்கள் சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஏராளமான காவல்துறையினர் மற்றும் கோவில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அமாவாசை தினத்தை முன்னிட்டு பழனியில் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால்,கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஏராளமான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN