Enter your Email Address to subscribe to our newsletters

பாளையங்கோட்டை , 14 ஜூன் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரொக்கப் பணம் சிக்கியுள்ளது.
இதையடுத்து சார் பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை சார் பதிவாளராக பணியாற்றி வருபவர் ஆதி சுப்பிரமணியன். இவர் மீது பத்திரப் பதிவுக்கு லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின்போது அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூபாய் 50,620 ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து சார் பதிவாளர் ஆதி சுப்பிரமணியன் உட்பட அலுவலக ஊழியர்கள் 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் பத்திரப் பதிவுக்கு வந்த பொதுமக்களிடம் இருந்து சட்டவிரோதமாக பெறப்பட்ட லஞ்சப் பணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் திருநெல்வேலி மாவட்ட பதிவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து 4 பேரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b