Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 14 ஜூன் (ஹி.ச.)
ஓமன் வளைகுடா அருகே வணிகக் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய கடலோடிகள் உயிரிழந்த விவகாரம் அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு உரிய முறையில் செயல்படவில்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் எம்.பி. பிரியஙக்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டிய நிலையில், அந்நாடு மிரட்டல் மற்றும் அழுத்தம் கொடுக்கும் மொழியை பயன்படுத்துவதாக அவர் விமர்சித்தார்.
மேலும், இந்திய குடிமக்கள் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய அரசு கடுமையான கண்டனத்தை பதிவு செய்யாமல் அமைதியாக இருப்பது ஏமாற்றமளிப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசின் வெளிநாட்டு கொள்கை அணுகுமுறையையும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் தேசிய மரியாதை தொடர்பான விஷயங்களில் அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P