தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, 14 ஜூன் (ஹி.ச.) தமிழ்நாட்டில் இன்று டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வடக்கு கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப்பாதை காரணமாக இன்று 4 மாவட்டங்களில் கனமழையும், 10 மாவட்டங்கள
மழை


தமிழ்நாடு, 14 ஜூன் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் இன்று டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வடக்கு கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப்பாதை காரணமாக இன்று 4 மாவட்டங்களில் கனமழையும், 10 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும், மழையின்போது 50 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும் கணித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் இன்று 102 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகவும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P