மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் உட்பட 35 பேர் கைது
தென்காசி, 14 ஜூன் (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து கேரளா கேரளாவிற்கு ஆயிரக்கணக்கான வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. விதிகளை மீறி இவ்வாறு கொண்டு செல்லப்படும் கனிம வளங்களால் தமிழ்நாட்டின் இயற்கை வளம் பாதிக்கப
Ravi Arunan


தென்காசி, 14 ஜூன் (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து கேரளா கேரளாவிற்கு ஆயிரக்கணக்கான வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது.

விதிகளை மீறி இவ்வாறு கொண்டு செல்லப்படும் கனிம வளங்களால் தமிழ்நாட்டின் இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது.

இந்த லாரிகளால் தினமும் தென்காசி திருவனந்தபுரம் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். தென்காசியில் இருந்து புளியரை வரையிலான சாலையில் குடிநீர் குழாய்களுக்கு சேதம் ஏற்பட்டதுடன் மாணவ மாணவியர்கள் வேலைக்கு சில்வரும் அவதிக்குள்ளாயினர்.

மேலும் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் தொடர்கிறது

எனவே இத்தகைய கனிம வள லாரிகளை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தென்காசி மாவட்ட இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் புளியரை சோதனை சாவடி அருகே மறியல் போராட்டம் நடந்தது.

இச்சங்கத்தின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே ரவி அருணன் தலைமையில் ஏராளமானோர் மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கனிம வள வாகனங்களை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் உட்பட 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN