அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் காத்திருந்து தரிசனம்
திருவண்ணாமலை, 14 ஜூன் (ஹி.ச.) பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா,
Tiruvannamalai


திருவண்ணாமலை, 14 ஜூன் (ஹி.ச.)

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள பக்தர்கள் வருகை தந்து அண்ணாமலையாரை தரிசித்து 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி இன்று வைகாசி அமாவாசையை முன்னிட்டு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் காலை முதல் குவிந்த பக்தர்கள் தொடர்ந்து 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அருணாசலேஸ்வரரை தரிசித்து வருகின்றனர்,

ராஜ கோபுரம் வழியாக பொது தரிசனத்தில் அனுமதிக்க கூடிய பக்தர்கள் கோவிலினுள் பல்வேறு இடங்களில் 4 முதல் 3 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து தொடர்ந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அதேபோல் கோவிலின் வடக்கு திசையில் அமைந்துள்ள அம்மணி அம்மன் கோபுரம் வாயில் வழியாக 50 ரூபாய் தரிசன கட்டணத்தில் அனுமதிக்க கூடிய பக்தர்கள் சுமார் 3 மணி முதல் 2 மணி நேரம் காத்திருந்து தொடர்ந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இன்றைய தினம் கோவில் நடை காலை 5:30 மணிக்கு திறக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 20 ஆயரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN