சாலை தடுப்பில் மோதிய இருசக்கர வாகனம் பேருந்தில் சிக்கி விபத்து - கோவையில் இரு இளைஞர்கள் பரிதாப பலி
கோவை, 14 ஜூன் (ஹி.ச.) கோவை மாவட்டம் உக்கடம் பகுதியைச் சேர்ந்த அபிப் ஜான் வயது 21 மற்றும் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவா வயது 21 ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். பொள்ளாச்சி முதல் கோவை செல்லும் நெடுஞ்சாலைய
Two-wheeler crashes into road median and gets trapped under bus


கோவை, 14 ஜூன் (ஹி.ச.)

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியைச் சேர்ந்த அபிப் ஜான் வயது 21 மற்றும் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவா வயது 21 ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.

பொள்ளாச்சி முதல் கோவை செல்லும் நெடுஞ்சாலையில் சேரன் நகர் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக அவர்கள் பயணித்த இருசக்கர வாகனம் சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பில் பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த இரு இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது எதிர் திசையில் வேகமாக வந்த தனியார் பேருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் அபிப் ஜான் மற்றும் சிவா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b