மனித இரத்தக் குழுக்களைக் கண்டறிந்த உலகப் புகழ்பெற்ற உயிரியலாளர் - கார்ல் லேண்ட்ஸ்டெய்னர்..!
தமிழ்நாடு, 14 ஜூன் (ஹி.ச.) கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் என்பவர் மனித இரத்தக் குழுக்களைக் கண்டறிந்த உலகப் புகழ்பெற்ற ஆஸ்திரிய-அமெரிக்க உயிரியலாளர் மற்றும் மருத்துவர் ஆவார். நவீன இரத்தமாற்று மருத்துவத்தின் தந்தையாகக் கருதப்படும் இவருடைய கண்டுபிடிப்புகள்,
க


தமிழ்நாடு, 14 ஜூன் (ஹி.ச.)

கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் என்பவர் மனித இரத்தக் குழுக்களைக் கண்டறிந்த உலகப் புகழ்பெற்ற ஆஸ்திரிய-அமெரிக்க உயிரியலாளர் மற்றும் மருத்துவர் ஆவார்.

நவீன இரத்தமாற்று மருத்துவத்தின் தந்தையாகக் கருதப்படும் இவருடைய கண்டுபிடிப்புகள், மருத்துவ உலகில் கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற உதவியுள்ளன.

இரத்தப் பிரிவுகளை வகைப்படுத்திய உயிரியல் வல்லுநர் கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் 1868ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி ஆஸ்திரியா தலைநகர் வியன்னா-வில் பிறந்தார்.

இவர் ஏ, பி, ஓ என்ற இரத்த வகையை 1901ஆம் ஆண்டு முதன்முதலாக கண்டறிந்தார்.

1909 இல் எர்வின் பாப்பர் என்பவருடன் இணைந்து, போலியோமைலிடிஸ் (போலியோ) நோய் பாக்டீரியாவால் அல்ல, ஒரு வகை வைரஸால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து தடுப்பூசி ஆராய்ச்சிக்கு வழிவகுத்தார்.

இதன் மூலம் தகுந்த இரத்த வகைகளைச் சேர்த்து பாதுகாப்பான முறையில் இரத்தம் செலுத்தும் முறை சாத்தியமானது.

இதற்காக இவருக்கு 1926ஆம் ஆண்டு அரோன்சன் பரிசு (Aronson Prize) கிடைத்தது.

1927ஆம் ஆண்டு பல புதிய வகை இரத்தப் பிரிவுகளை கண்டறிந்ததற்காக 1930ஆம் ஆண்டு இவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

நோபல் பரிசு:

மனித இரத்தக் குழுக்களைக் கண்டறிந்ததற்காக இவருக்கு 1930 ஆம் ஆண்டு மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது

Rh காரணி (Rh Factor):

1940 ஆம் ஆண்டில் அலெக்சாண்டர் வீனர் என்பவருடன் இணைந்து, இரத்தத்தில் உள்ள Rh காரணியைக் கண்டறிந்தார்.

இது பிரசவ காலத்திலும், இரத்தமாற்றத்தின் போதும் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க உதவியது.

உயிரியல், உடற்கூறியல், நோய் எதிர்ப்பாற்றல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் 1943ஆம் ஆண்டு மறைந்தார்

உலக இரத்த தான தினம்:

மருத்துவ உலகிற்கு இவர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில், இவருடைய பிறந்த நாளான ஜூன் 14 ஆம் தேதி ஆண்டுதோறும் உலக இரத்த தான தினமாக கொண்டாடப்படுகிறது.

Hindusthan Samachar / Durai.J