மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை
லண்டன், 14 ஜூன் (ஹி.ச.) 10-வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் லீக் ஆட்டங்கள் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், உலக கிரிக
I


லண்டன், 14 ஜூன் (ஹி.ச.)

10-வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் லீக் ஆட்டங்கள் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில், உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. தொடரின் 6-வது லீக் போட்டியான இந்த ஆட்டம் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது.

பாரம்பரிய போட்டியாளர்களான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் உலகக்கோப்பை மேடையில் நேருக்கு நேர் மோதுவதால் இந்த போட்டிக்கு கூடுதல் முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது.

இரு அணிகளும் வெற்றியுடன் தொடரை முன்னெடுக்க தீவிரம் காட்டுவதால் ஆட்டத்தில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA